×

லால்குடியில் ஜல்லிக்கட்டு சென்னை கலைப்பொருட்கள் வியாபாரி கைது வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

 

திருச்சி, பிப்.5: திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் சங்கமேஷ்வரன் (26). இவர் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வேலை சம்மந்தமாக வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்ல பெட்டவாய்த்தலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் வந்த வாலிபர் ஒருவர் சங்கமேஷ்வரன் சட்டை பாக்கெட்டில் இருந்த ₹.1500 பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து சங்கமேஷ்வரன் கோட்டை குற்றப்பிரிவில் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த ஆசிக் பாஷா(21) என்ற வாலிபரை கைது செய்தனர்.

ஜல்லிக்கட்டு காளை பலி திருச்சி பெரியவர்சீலியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரின் காளை லால்குடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளை நன்னிமங்கலம் செல்லும் சாலையில் தறிகெட்டு ஓடியபோது, அப்பகுதியில் இருந்த சாக்கடையில் கால்தவறி விழுந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே காளை உயிரிழந்தது.

 

The post லால்குடியில் ஜல்லிக்கட்டு சென்னை கலைப்பொருட்கள் வியாபாரி கைது வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jallikattu Chennai ,Lalgudi ,Trichy ,Sangameswaran ,Pettavaitalai ,Chatram ,Sangameshwaran ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...